புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (09:13 IST)

அமெரிக்க அதிபர் தேர்தல்; ஒரு வருடத்திற்கு முன்பே பிரச்சாரத்தை தொடங்கிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். அனேகமாக ஒரு ஆண்டுக்கு முன்னரே பிரச்சாரத்தை ஆரம்பித்த அமெரிக்க அதிபர் வேட்பாளர் இவராகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது
 
கடந்த 2016ஆம் ஆண்டு  நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டன்தான் வெற்றி பெறுவார் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறிய நிலையில் எதிர்பாராத வகையில் டிரம்ப் வெற்றி பெற்று 45-வது அதிபராக பதவியேற்றார். ஆனால் அவரது வெற்றியில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது.
 
இந்த நிலையில் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள டிரம்ப் நேற்று ஃபுளோரிடா மாகாணம் ஓர்லண்டோவில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். டிரம்பை எதிர்த்து மீண்டும் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யாராக இருக்கும் என்பதே தற்போதைய அமெரிக்கர்களின் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது