திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (13:25 IST)

புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது: தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் உரை..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் புதிய வரலாறு படைத்துள்ளதாகவும், தேர்தல் வெற்றியால் அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது, அதில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, அவர் தற்போது வெற்றி உரையை ஆற்றி வருகிறார். அந்த உரையில், குடியரசு கட்சிக்காக வாக்களித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டு, இதுவரை யாரும் காணாத வகையில் ஒரு இயக்கத்தை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம் என்று கூறினார்.

 வளமான அமெரிக்காவை உறுதிப்படுத்துவேன் என்றும், தன்னை அதிபராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார். அமெரிக்காவில் இனி பொற்காலம் வரப்போகிறது என்றும், மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர், அவர்களின் நம்பிக்கை வீணாகாது என்றும் கூறினார்.

 மேலும், "இது எனது வெற்றி அல்ல; அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற மக்களின் வெற்றி," என்றும் அவர் குறிப்பிட்டார். டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து உலகத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Edited by Mahendran