அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்தியர் நியமனம்! – புரியாத புதிரான ட்ரம்ப்!
அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக அமெரிக்க இந்தியர் ஒருவரை அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக அமெரிக்க இந்தியர் சதர்சனம் பாபு என்பவரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
தமிழகத்தின் கோயம்புத்தூரில் படித்த சுதர்சனம் பாபு உலோக பிரிவியலில் 21 வருட அனுபவம் கொண்டவர். சென்னை ஐஐடியில் முதுகலை படித்த இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளார்.
தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் மூன்றாவது அமெரிக்க இந்தியர் சுதர்சனம் பாபு என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் அமெரிக்காவிற்கும் பிற நாட்டினார் வசிப்பதற்கு தடையை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மற்றொரு புறம் பிற நாட்டினரை முக்கிய பதவிகளில் அமர வைத்து புரியாத புதிராக இருப்பதாக பலர் பேசிக் கொள்கின்றனர்.