ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 ஜூன் 2019 (16:13 IST)

அட்டைப் புழுவை கடத்த நாடுவிட்டு நாடு வந்தவர் – அதிகாரிகள் அதிர்ச்சி

சின்ன வயதிலிருந்தே நாம் புழுவை எவ்வளவு அருவறுப்பாக பார்க்கிறோம். ஆனால், கனடாவிலிருந்து ரஷ்யாவுக்கு புழுக்களை கடத்தி கொண்டு போனவரை விமான நிலைய அதிகாரிகள் கையும், புழுவுமாக பிடித்துள்ளனர். புழுவை கூடவா கடத்துவார்கள் என அங்குள்ளவர்கள் இந்த சம்பவத்தால் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்தவர்  இப்போலிட் பொடவ்நோவ். இவர் சில நாட்களுக்கு முன்னால் கனடாவில் உள்ள டோரண்டோ பகுதிக்கு சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார். மீண்டும் ரஷ்யாவுக்கு கிளம்பியவர் கையில் ஒரு பையை கொண்டு சென்றிருக்கிறார். அந்த பையை பார்த்த அதிகாரிகள் அவர் மேல் சந்தேகம் வந்து அதை சோதித்து பார்த்திருக்கிறார்கள். அதில் 7 பிளாஸ்டிக் பைகள் இருந்திருக்கின்றன. அதை திறந்து பார்த்த அதிகாரிக்கு குமட்டி கொண்டு வந்துவிட்டது. அதனுள் சுமார் 4000க்கும் மேற்பட்ட அட்டைப்பூச்சிகள் இருந்தன.

அட்டைப்பூச்சிகளில் பல வகை உள்ளது. பொடவ்நோவ் கடத்தி செல்ல இருந்தது இரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணி வகை அட்டைப்பூச்சிகள். இதை எதற்காக இவர் கடத்தி செல்கிறார் என அவர்கள் குழம்பினர். அவரிடம் விசாரித்த போது ஏதோ ஆராய்ச்சிக்காக என்று சொல்லியிருக்கிறார். அந்த அட்டைபுழுக்களை ஆராய்ச்சிக்காக ராயல் ஒண்டோரியோ மியூசியத்திற்கும், டி என் ஏ ஆய்விற்காக நியூயார்க்கில் உள்ள அமெரிக்க இயற்கை ஆய்வகத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதை சோதித்த நிபுணர்கள் இதில் 240 அட்டைப்பூச்சிகள் கிடைப்பதற்கு அரிதான அடர்ந்த காடுகளில் வாழக்கூடியவை. இவற்றின் வயிற்றில் சுரக்கும் திரவமானது பல நோய்களுக்கு மருந்தாக பயன்பட கூடியது என தெரிவித்திருக்கிறார்கள்.

கனடாவின் காட்டுப்பகுதியில் உள்ள அட்டைகளை பற்றி ஒருவர் தெரிந்து அதை கடத்துவதற்காக ரஷ்யாவிலிருந்து வந்திருப்பது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நம்ம ஊரிலும் நிறைய அட்டைகள் இருக்கு. நாமதான் நசுக்கி போட்டு விடுகிறோம். அதற்கு என்ன மருத்துவகுணம் இருக்கோ? யார் கண்டது.