திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (16:10 IST)

பகலாக மாறும் இரவுகள்; அழிவின் ஆரம்பமா?

இரவுக்கும் பகலுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் குறைந்து வருவதாக அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


 
அமெரிக்காவை சேர்ந்த கிப் கோட்ஜஸ் என்பவர் அவரது குழுவினருடன் சேர்ந்து பூமியின் பகல் நேரம் குறித்து கடந்த சில வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகிறார். தற்போது அந்த ஆராய்ச்சியின் ஆய்வு குறித்து அறிக்கையை கட்டுரையாக ‘சைன்ஸ் அட்வான்ஸ்’  என்ற நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த ஆராய்ச்சியின் மூலம் பூமியின் பல இடங்களில் இரவுக்கும், பகலுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது தெரியவந்துள்ளது. நிறைய இடங்கள் இரவில் கூட மிகவும் அதிக வெளிச்சத்துடன் காணப்பட்டு இருக்கிறது. கடந்த 5 வருடங்களில் மட்டும் பூமியின் ஒளி அளவு 25 சதவீதத்திற்கு அதிகமாக அதிகரித்து உள்ளது. 
 
இதனால் பகலின் நேரம் அதிகரித்துள்ளது. எண்ணெய் வள நாடுகளான துபாய் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஆசியாவில் உள்ள இந்தியா, சீனா, மலேசியா போன்ற நாடுகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
 
பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் எதிர்காலத்தில் இரவுகளே இருக்கது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான விளக்குகளின் பயன்பாடுகளே இந்த பாதிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.