வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 நவம்பர் 2017 (13:00 IST)

இப்படியே போனால் பூமி தீப்பந்தாக மாறிவிடும்; ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை

பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே இருந்தால் இன்னும் 600 ஆண்டுகளில் அதாவது 2600ஆம் ஆண்டில் பூமி நெருப்பு பந்து போன்று மாறும் என பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.


 

 
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பெய்ஜிங்கில் நடந்த அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
 
பூமியில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூமி தொடர்ந்து வெப்பமயமாகி கொண்டே வருகிறது.
 
இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இன்னும் 600 ஆண்டுகளில் பூமி கொளுந்துவிட்டு எரியும் நெருப்பு பந்து போன்று மாறும். இதனால் பூமியில் உள்ள உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆனால் மனிதன் நினைத்தால் இன்னும் 10 லட்சம் ஆண்டுகளுக்கு உயிர்வாழ முடியும்.
 
மனிதர்கள் சூரிய மண்டலத்துக்கு அருகே ஆல்பா செண்டாரி துணை கிரகத்தில் குடியேறலாம். இந்த கிரகத்திற்கு ஒரு வாரத்திற்குள் செல்ல முடியும். செவ்வாய் கிரகத்தை விட தூரம் குறைவானது. அதற்கான ஏற்பாடுகளை இன்னும் 20 ஆண்டுகளில் செய்து முடித்துவிடுங்கள் என்றார்.