வியாழன், 6 அக்டோபர் 2022
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated: வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:36 IST)

ஊழல் குற்றச்சாட்டுக்கு நிரூபணம்: முன்னாள் நீதி அமைச்சருக்கு மரண தண்டனை விதிப்பு

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் முன்னாள் நீதி அமைச்சர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் நடந்துள்ளது
 
சீனாவை சேர்ந்த நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உயர் அமைச்சராக பதவி வகித்தவர் ஒருவர் தனது பதவிகாலத்தில் ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது 
 
இதனை அடுத்து இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
 
ரூபாய் 58.53 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாகவும் இதனை கோர்ட்டில் வழக்கறிஞர்கள் ஆதாரத்துடன் நிரூபித்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் சீன பத்திரிகைகள் செய்திகள் வெளியாகிஉள்ளது வெளியிட்டுள்ளன.