திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2016 (12:52 IST)

கருப்பு, வெள்ளையாய் மாறியது சாக்கடல்(Dead Sea) செய்த மாயம்.....

இஸ்ரேலைச் சேர்ந்த சிகாலிட் லாடாவ் என்ற கலைஞர் ஒருவர் வித்தியாசமான முயற்சி ஒன்றை செய்து அதில் வெற்றி கண்டுள்ளார்.


 
 
உலகிலெயே உயிரினங்கள் வசிக்காத இடம் சாக்கடல். டெட் ஸீ என பெயர் பெற்றது. இதில் உப்பின் அளவு மிக அதிகமாக இருப்பதே உயிரினங்கள் வாழாததற்கான காரணம்.
 
இஸ்ரேல் கலைஞரான சிகாலிட், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழைய கருப்பு நிறம் படிந்த ஆடையை, சாக்கடலில் 3 மாதங்கள் வைத்திருந்தார். நீண்ட கம்புகளில் ஆடையை கட்டி, சாக்கடலுக்குள் வைத்து விட்டார். வாரம் ஒருமுறை துணியை எடுத்து, படங்கள் எடுத்துக்கொண்டார். 
 
கருப்புத் துணி, மூன்றே மாதங்களில் பளிங்கு நிறம் கொண்ட துணியாக மாறிவிட்டது. சாக்கடலில் இருக்கும் அதிகப்படியான உப்புதான், துணியை இப்படி மாற்றியிருக்கிறது என கருதப்படுகிறது.