செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (18:09 IST)

கொரோனோ வைரஸில் இருந்து குணமடைந்த சிறுமியின் டான்ஸ்... வைரல் வீடியோ !

கொரோனோ வைரஸல் குணமடந்த சிறுமியின் டான்ஸ்... வைரல் வீடியோ !
சீனாவில் கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி, நோய் முற்றிலும் குணமடைந்து மருத்துவமனை கொண்டு செல்லும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 
சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் இருந்து ஆரம்பித்த கொரோனோ வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 2118 பேருக்கு மேள் இறந்துள்ளதாகவும் தெரிகிறது. அதனால் கொரோனோ வைரஸால் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மொத்தம் 74,576 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்நிலையில், கொரோனோ வைரஸால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி 16 நாட்கள் சிகிச்சைக்கு பின், குணமடைந்துள்ளார். அவர் வீடு திரும்பும் முன்னதாக மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.