செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (11:33 IST)

தென் கொரியாவில் எகிறும் கொரோனா பாதிப்பு!

தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது என தகவல் வெயாகியுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59.76  கோடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் கொரோனாவை வென்று விட்டோம் என சமீபத்தில் குறிப்பிட்ட நிலையில் தென் கொரியாவில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 1,80,803 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 84,128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும், தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் உயிரிழப்பு குறைந்துள்ளது என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.