1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (17:04 IST)

போர் சூழலில் ரஷியாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் வாங்கிய நாடுகள் எவை?

எந்த நாடு ரஷியாவிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்துள்ளது என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

 
உக்ரைனுக்கு எதிராக போர் தொடங்கியதில் இருந்து எந்த நாடு ரஷியாவிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்துள்ளது என்ற தகவலை எரிவாயு மற்றும் தூய காற்று ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. 
 
கடந்த 2 மாதங்களில் ஒட்டுமொத்தமாக எரிவாயு, கச்சா எண்ணெய், நிலக்கரி மூலம் ரஷியாவுக்கு கிடைத்த மொத்த வருவாயில் 71 சதவிகிதம் 44 பில்லியன் யூரோ ஐரோப்பிய யூனியன் நாடுகளிடமிருந்தே வந்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
1. போர் தொடங்கியது முதல் ரஷியாவிடமிருந்து அதிக அளவில் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் வாங்கியது ஐரோப்பிய நாடான ஜெர்மனி (9.1 பில்லியன் யூரோ). 
 
2. ரஷியாவிடமிருந்து எரிபொருள், இயற்கை எரிவாயு ஆகியவற்றை அதிக அளவில் கொள்முதல் செய்த இரண்டாவது நாடு இத்தாலி (6.9 பில்லியன் யூரோ).
 
3. 3-வது இடத்தில் சீனா கடந்த 2 மாதத்தில் ரஷியாவிடமிருந்து 6.7 பில்லியன் யூரோ மதிப்பிற்கு எரிவாயு, கச்சா என்ணெய் வாங்கியுள்ளது.