சீனாவில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று... அதிகாரிகள் தகவல் !

china
sinoj| Last Updated: சனி, 28 மார்ச் 2020 (15:46 IST)
சீனாவில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று.. அதிகாரிகள் தகவல் !

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

உலக அளவில் 6,00,787 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 27, 214 பேர் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் சில நாட்கள் வரை உள்ளூர் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தநிலையில், நேற்று முன் தினம் ஜெஜியாங் மாகாணத்தில் ஒருவர் பாதிப்பட்டுள்ளதாகவும், மூன்று நாட்களுக்கு பின் ஒருவருக்கும் வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு
வந்திருந்த ஒருவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சீனர்கள் 54 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் 595 பேருக்கு இந்த நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, நாடு முழுவதும் 81 ஆயிரத்து 340 பேர் பாதிக்கபட்டுள்ளனர் 3490 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர், பலி எண்ணிக்கை 3,262பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :