ஸ்பெயினில் கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு… ஒரேநாளில் 832 பேர் உயிரிழப்பு !!

spain
Sinoj| Last Updated: சனி, 28 மார்ச் 2020 (17:15 IST)
ஸ்பெயினில் கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு… ஒரேநாளில் 832 பேர் உயிரிழப்பு !!

உலக அளவில் 6,00,787 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 27, 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்க நாட்டில் மட்டும்
கொரோனாவால் 1,04, 256 ப்ர்ர்ட் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று
ஏற்பட்டுள்ளது, இத்தாலி - 86,498 சீனா - 81,394 ஸ்பெயின் - 65,719 ஜெர்மனி - 53,340 பிரான்ஸ் - 32,964 ஈரான் - 32,332 பிரிட்டன் - 14,543 சுவிஸ் - 12,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 5690 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,
அந்நாட்டில் கடந்த ஒருநாளில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு 832 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 6,529 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :