ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 28 மார்ச் 2020 (16:45 IST)

கொரோனா தடுப்பூசி ...ஆய்வில் பிரபல பல்கலைக்கழகம் சாதனை !

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

உலக அளவில் 6,00,787 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 27, 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பெரும் தொற்றினால் ஏராளமான நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், இந்த கொரோனாவுக்கு பல்வேறு ஆராய்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த  ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முதல் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இங்கிலாந்தில்  தேம்ஸ் பள்ளத்தாக்கில் இருக்கும் ஆய்வகத்தில் உள்ள ஒரு பரிசோதனை மையத்தில் சோதனை நடத்துவதற்காக 18 வயது முதல் 555 வயதுவரை சுமார் 510 தன்னாவலர்களை தேர்வு செய்து வருதாக பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், வேக்சின் வெக்டர் மற்றும் சார்லஸ் கொரோனா – 2 என்ற புரதம் அடிப்படையில் இந்த கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அதில்,வைரஸ் வெக்டேர்டு சிறந்ததாக கருத்துவதால் இது கொரோனா தடுப்புக்கு சிறப்பால எதிர்வினை ஆற்றும் என ஆய்வில் ஈடுபட்டுள்ள குழு தெரிவித்துள்ளது.

கர்டந்த 2914 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க கண்டத்தை தாக்கிய எபோலா வைரஸுக்கு வெற்றிகரமான தடுப்பூசியைக்  கண்டுபிடித்தது ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் என்பது குறிப்பிடத்தக்கது.