திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (07:55 IST)

உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது: கொரோனா குறித்து ஜாக்கிசான்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் அபாயம் குறித்து கொரோனாவில் இருந்து பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதும் இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அவர்கள் தனது சமூக தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ’உலகில் உள்ள அனைவரும் அவரவர் நாட்டின் அரசு போடும் உத்தரவுகளையும் அறிவுரைகளையும் மதித்து பாதுகாப்பாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் நீங்கள் வீட்டுக்குள் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்வது, உங்கள் குடும்பத்தையும் சேர்த்து பாதுகாத்துக் கொள்வதற்கு சமம் என்றும் அதனால் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார் 
 
மேலும் அவசிய தேவை காரணமாக வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியே செல்லுங்கள் என்றும் அதே போல் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பி உடன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி கொள்ளுங்கள் என்றும் அது உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு என்று கூறியுள்ளார் 
 
கொரோனா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்றும் அந்த வைரஸில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்வதற்கு ஒரே வழி வீட்டுக்குள்ளே இருப்பதுதான் என்றும் எனவே அனைவரும் வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் ஜாக்கிசான் மேலும் கூறியுள்ளார். ஜாக்கிசான் அவர்களின் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது