செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:55 IST)

பாமக மாவட்ட செயலாளர் கொலை… முன்னாள் போலிஸ் உள்ளிட்ட நான்கு பேர் கைது!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தின் பாமக செயலாளராக இருந்தவர் தேவமணி.

இவர் காரைக்காலுக்கு அருகாமையில் உள்ள திருநள்ளாறில் வசித்து வந்தார். கடந்த 23 ஆம் தேதி இரவு இவர் கடைவீதியில் தனது இரு சக்கரவாகனத்தில் செல்லும்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே பலியானார் தேவமணி.

இது சம்மந்தமாக போலிசார் நடத்திய விசாரணையில் நிலத்தகராறு காரணமாக தேவமணி கொலை செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. மணிமாறன் என்பவர் கூலிப்படையை அனுப்பி தேவமணியைக் கொலை செய்துள்ளார். இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு கூலிப்படையினரில் ஒருவர் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் போலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.