1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2020 (15:20 IST)

அமெரிக்காவில் 8 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு

corono

சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ்    பரவியுள்ளது. இதில், அமெரிக்காவில் மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நாடு முழுவதும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுவரும் சுமார் 8 ஆயிரம் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில், நேற்று ஒரேநாளில் மட்டும் 2200 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நோயாளிகளைக் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு,  கலிபோர்னியா மாகாணத்தில் மட்டும் 8 ஆயிரம் சுகாதாரப்பணியாளர்களும், அலபாமாவில் 393 பணியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பணியாளர்களை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.