ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (14:11 IST)

5000 ஆண்டுக்கு முந்தைய நெருப்புக்கோழி முட்டைகள் - விலகிய மர்மம்!

லண்டனின் பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் இருக்கும் நெருப்புக்கோழி முட்டைகள் குறித்த மர்மத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
 
பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில நெருப்புக்கோழி முட்டைகள் இத்தாலியில் கண்டெடுக்கப்பட்டவை. ஆனால், நெருப்புக்கோழிகள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவை அல்ல என்பதால், அந்த முட்டைகள் உண்மையில் எந்தப் பகுதியை சேர்ந்தவை என்பது மர்மமாகவே இருந்தது.
 
தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழு, அந்தத் நெருப்புக்கோழி முட்டைகள் பற்றிய வரலாற்றைக் கண்டறிந்துள்ளனர். 5000 ஆண்டுகளுக்கு முன், வெண்கல மற்றும் இரும்பு யுகங்களில் ஐரோப்பா, மத்திய தரைக்கடல், மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் மக்கள் நெருப்புக்கோழி முட்டைகளை வர்த்தம் செய்தது தெரிய வந்துள்ளது.
 
பணக்கார நபர்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் இதுபோன்ற முட்டைகள் கண்டெடுக்கப்படுவதால், அலங்கரிக்கப்பட்ட நெருப்புக்கோழி முட்டைகள் ஆடம்பரப் பொருட்களாக இருந்திருக்கலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி திட்டத்தை தலைமை தாங்கும் டாமர் ஹோடொஸ்.
 
அதே போல அவை காட்டில் வாழ்ந்த நெருப்புக்கோழிகளா அல்லது மனிதர்களால் வளர்க்கப்பட்டவையா என்பதை கண்டறிவதிலும் ஹோடொஸின் குழு ஆர்வமாக இருந்தது. லண்டனின் பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் இருக்கும் நெருப்புக்கோழி முட்டைகள் குறித்த மர்மத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
 
பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சில நெருப்புக்கோழி முட்டைகள் இத்தாலியில் கண்டெடுக்கப்பட்டவை. ஆனால், நெருப்புக்கோழிகள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்தவை அல்ல என்பதால், அந்த முட்டைகள் உண்மையில் எந்தப் பகுதியை சேர்ந்தவை என்பது மர்மமாகவே இருந்தது.
 
தற்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் சர்வதேச குழு, அந்தத் நெருப்புக்கோழி முட்டைகள் பற்றிய வரலாற்றைக் கண்டறிந்துள்ளனர். 5000 ஆண்டுகளுக்கு முன், வெண்கல மற்றும் இரும்பு யுகங்களில் ஐரோப்பா, மத்திய தரைக்கடல், மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் மக்கள் நெருப்புக்கோழி முட்டைகளை வர்த்தம் செய்தது தெரிய வந்துள்ளது.
 
பணக்கார நபர்கள் புதைக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் இதுபோன்ற முட்டைகள் கண்டெடுக்கப்படுவதால், அலங்கரிக்கப்பட்ட நெருப்புக்கோழி முட்டைகள் ஆடம்பரப் பொருட்களாக இருந்திருக்கலாம் என்கிறார் இந்த ஆராய்ச்சி திட்டத்தை தலைமை தாங்கும் டாமர் ஹோடொஸ்.
 
அதே போல அவை காட்டில் வாழ்ந்த நெருப்புக்கோழிகளா அல்லது மனிதர்களால் வளர்க்கப்பட்டவையா என்பதை கண்டறிவதிலும் ஹோடொஸின் குழு ஆர்வமாக இருந்தது.