வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 17 ஏப்ரல் 2023 (22:22 IST)

சூடானில் ராணுவம்- துணைராணுவம் இடையே மோதல்...97 பேர் பலி

sudan
சூடான் நாட்டில் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே நடைபெற்று வரும் மோதலில் 97 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சூடானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்தது. எனவே ராணுவத் தளபதிகளாக  இறையாண்மை அமைப்பு என்ற பெயரில் ஆட்சி  நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ராணுவ ஆட்சியில் இருந்து மீண்டும் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப வேண்டுமென்ற முன்மொழிவின்படி, ராணுவத்துடன் , துணை ராணுவப்படையை இணைப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.

இனிவரும் 2ஆண்டுகளுக்கும் துணை ராணுவத்தை இணைக்கும் பணியை முடிக்க வேண்டுமென்று ராணுவம்  உத்தரவிட்டது.

ஆனால்,  இந்த உத்தரவு 10 ஆண்டுகள்  கழித்துத்தான் செய்ய வேண்டுமென்று துணை ராணுவத்தினர் பதிலளித்தது.

இந்த நிலையில், இரு ராணுவத்தினருக்கும் இடையே சண்டை வலுத்து வருகிறது.  இதற்கிடையே தலைநகர் கார்டோமில் உள்ள அதிபர் மாளிகை ராணுவ தலைமையகம், மற்றும் அரசுத் தொலைக்காட்சி அலுவலத்தை கைப்பற் இரு தரப்பினரும் பலத்த மோதலில்  ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த மோதலில், இதுவரை 97 பேர் பலியானதாகக் கூறப்படும் நிலையில், ஐநா பொதுச்செயலாளர் சூடானின் போன்மூலம் தொடர்புகொண்டு, சண்டையை நிறுத்தும்படி வலியுறுத்தியுள்ளார்.