1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2023 (07:31 IST)

உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் பண்டிகை.. ஏசு பிறந்த பெத்லகேமில் மட்டும் சோகம்..!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டிய வரும் நிலையில் ஏசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் காரணமாக கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று களைகட்டிய வருகிறது, பல 
தேவாலயங்களில் சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனையில் ஏராளமான மக்கள் பங்கேற்று வருகின்றனர்.
 
அதேபோல் தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டிய வருகிறது. தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சர்ச்சுகளில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடந்து வருகிறது. குறிப்பாக நாகை வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம் சர்ச்சுகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 
ஆனால் ஏசு கிறிஸ்து பிறந்த பெத்லகேமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது.  இஸ்ரேல்-பாலஸ்தீன போர் காரணமாக கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva