1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (08:30 IST)

கேம் விளையாட ரூ.52 லட்சத்தை காலி செய்த சிறுமி! – குடும்பத்தினர் அதிர்ச்சி!

China Game
வீடியோ கேம் மீதான மோகத்தில் சிறுமி ஒருவர் ரூ.52 லட்சத்தை காலி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தற்போதை காலகட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்களிடையே கேமிங் மோகம் தலை விரித்தாடுகிறது. தீவிரமாக நாள் முழுவதும் கேம் விளையாடுவதால் பலர் உடல்நல பாதிப்புக்கு ஆளாவதுடன், பணத்தை இழக்கும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளன.

சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் மொபைல் கேம் விளையாடுவதில் தீவிர மோகத்தில் இருந்து வந்துள்ளார். புதிய புதிய கேம்களை வாங்குவதற்காகவும், கேமில் உள்ள கேட்ஜெட்களை வாங்குவதற்காகவும் சிறுமி தனது அம்மாவின் டெபிட் கார்டை திருட்டுத்தனமாக பயன்படுத்தி வந்துள்ளார்.

ஒருநாள் சிறுமியின் அம்மா பேங்க் அக்கவுண்ட் பேலன்ஸை பார்த்தபோது அதில் வெறும் 5 சீன யுவான் மட்டுமே இருந்துள்ளது. அவர் அவரது வங்கி கணக்கில் 1,20,000 சீன யுவான்களை வைத்திருந்தார். இது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்ததில் அனைத்து பணத்தை கேம் வாங்க செலவிட்டது தெரிய வந்துள்ளது.

மேலும் தனது பள்ளி தோழிகள் ஆன்லைன் கேம் விளையாடுவதற்காகவும் அவர் அந்த பணத்தை செலவு செய்துள்ளார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேம் விளையாடுவதற்காக இந்திய மதிப்பில் ரூ.52 லட்சத்தை சிறுமி காலி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K