உடைக்கப்பட்ட உக்ரைன் அணைக்கட்டு.. நீரில் மூழ்கிய நகரங்கள்! – காரணம் யார்?
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனின் பிரம்மாண்டமான அணை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
உக்ரைன் மீது கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக ரஷ்யா தொடர்ந்து போர் நடத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவின் உதவியுடன் தொடர்ந்து உக்ரைனும் ரஷ்யாவை எதிர்த்து போராடி வருகிறது. எனினும் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
சில காலம் முன்னதாக உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் கெர்சன் பகுதியில் உள்ள கக்கோவ்கா அணை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அணை உடைந்தது. இதனால் வெளியேறிய அணை வெள்ளம் கிராமங்களையும், நகரங்களையும் மூழ்கடித்துள்ளது.
24 கிராமங்களை மூழ்கடித்துள்ள வெள்ளத்தில் இருந்து 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் வீட்டு மேற்கூரைகளில் ஏறி நின்று உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்களை படகின் மூலம் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றனர். இந்த அணை உடைப்பால் 42 ஆயிரம் மக்களின் உயிர் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணையை உடைத்தது யார் என்று ரஷ்யா, உக்ரைன் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அணையை தாக்கி உடைத்தது ரஷ்ய ராணுவம்தான் என உக்ரைன் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை மறுத்துள்ள ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீதே பழி சொல்லி வருகிறது. இந்த அணை உடைப்பு சம்பவம் உக்ரைனில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K