தலாய்லாமாவை யாரும் சந்திக்கக் கூடாது - மிரட்டும் சீனா
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவை சந்தித்தால் அது பெரிய குற்றம் என உலக தலைவர்களை சீனா எச்சரித்துள்ளது.
சீனாவிடமிருந்து திபெத்தை பிரித்துக் கொண்டு செல்லும் முயற்சியில் தலாய்லாமா ஈடுபட்டிருப்பதாக பல வருடங்களாக சீனா குற்றம் சாட்டி வருகிறது.
1959ம் ஆண்டு அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். கடந்த ஏப்ரல் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் அவர் 9 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். ஆனால், இந்திய அனுமதிக்கக் கூடாது என சீனா கோரிக்கை விடுத்தது. ஆனால், இந்தியா அதை நிராகரித்து.
இந்நிலையில், சீன கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாங் யூஜியோங் ஒரு மாநாட்டில் பேசிய போது “ எந்தவொரு நாடோ, நபரோ அல்லது அமைப்போ தலாய்லாமாவை சந்தித்தால் அது சீன மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் மாபெரும் குற்றமாகும்.
அவருடைய விவகாரத்தில் மற்ற நாடுகள் கூறுவதை நாங்கள் ஏற்கமட்டோம். ஏனெனில், அவர் மதத்தின் பெயரில் உள்ள ஒரு அரசியல்வாதியாகத்தான் அவர் இருக்கிறார். அவரின் ஒரே இலக்கு சீனாவிடமிருந்து திபெத்தை பிரித்தெடுப்பது மட்டும்தான்” என அவர் பேசியுள்ளர்.