1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 ஜூலை 2020 (10:37 IST)

App-ஐ தடையால் நஷ்டம் எனக்கில்லை: கொக்கரிக்கும் சீனா?

இந்திய அரசின் தடையினால் இந்திய ஊழியர்களின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமுமே பாதிக்கப்படும் என சீனா அறிக்கை. 
 
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும். 
 
ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து சீன தூதரகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தடை செய்யப்பட்ட செயலிகளுக்கு இந்தியாவில் பெரிய அளவில் பயனாளர்கள் உள்ளனர். 
 
எனவே இந்திய அரசின் இந்தத் தடையினால் இந்திய ஊழியர்களின் வேலைவாய்ப்பும் வாழ்வாதாரமுமே பாதிக்கப்படும். மேலும் இதை உருவாக்கியவர்கள் மற்றும் முதலாளிகளுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.