சீனாவின் ஆகஸ்ட் தொழில்துறை உற்பத்தி 5.6%, சில்லறை விற்பனை 0.5% அதிகரிப்பு !!

china
Thirumalai somu| Last Updated: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (17:13 IST)

சீனாவில் தொற்றுநோய் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்த போதிலும் தொழிற்சாலைகளில், உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை அதிகரித்ததால் சீனாவில் பொருளாதாரம் சீரான மீட்சியடைந்துள்ளது என்று சீன தேசிய புள்ளிவிவர பணியகம் (என்.பி.எஸ்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டின் மதிப்பு கூட்டப்பட்ட தொழில்துறை உற்பத்தி ஆகஸ்ட் மாதத்தில் 5.6 சதவீதம் உயர்ந்து எட்டு மாதங்களில் மிக விரைவான லாபத்தை எட்டியுள்ளது என்று என்.பி.எஸ் தரவு காட்டுகிறது. இது ஜூலை மாதத்தில் பதிவான 4.8 சதவீதத்தை விட அதிகமானது. மேலும் ராய்ட்டர்ஸ் கணித்த 5.1 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும். ஒரு மாத அடிப்படையில், தொழில்துறை உற்பத்தி ஆகஸ்டில் 1.02 சதவீதம் உயர்ந்தது, இது ஜூலை மாதத்தின் 0.98 சதவீத உயர்வை விட அதிகமாகும். முதல் எட்டு மாதங்களில், தொழில்துறை உற்பத்தி ஜனவரி-ஜூலை காலகட்டத்தில் அடைந்த
சரிவுடன் ஒப்பிடுகையில். ஒரு வருடத்திற்கு முந்தைய காலத்திலிருந்து 0.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

நுகர்வு வளர்ச்சியின் முக்கிய குறிகாட்டியான சீனாவின் நுகர்வோர் பொருட்களின் சில்லறை விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் ஆண்டுக்கு 0.5 சதவீதம் உயர்ந்தது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட தேவை காரணமாக மின்னணுவியல் சில்லறை விற்பனை அதிகரித்தது என்று சீனாவின் தலைமை பொருளாதார நிபுணர் வாங் டான் தெரிவித்தார். அதோடு மட்டுமின்றி ஜனவரி-ஆகஸ்ட் காலகட்டத்தில் சீனாவின் நிலையான சொத்து முதலீடு ஆண்டுக்கு 0.3 சதவீதம் குறைந்துள்ளது, எனினும் முதல் ஏழு மாதங்களில் காணப்பட்ட 1.6 சதவீத வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்துள்ளதாக என்.பி.எஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. நிலையான-சொத்து முதலீட்டில் உள்கட்டமைப்பு, சொத்து, இயந்திரங்கள் மற்றும் பிற சொத்துக்களுக்கு செலவிடப்பட்ட மூலதனம் அடங்கும். ஒரு மாத அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தில் நிலையான சொத்து முதலீடு 4.18 சதவீதம் உயர்ந்தது. முதல் எட்டு மாதங்களில், அதன் மதிப்பு 37.88 டிரில்லியன் யுவான் (சுமார் 5.55 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும். "உள்கட்டமைப்பு கட்டிடப் பணிகள் வேகம் எடுக்கத் தொடங்கியது, இரும்புகள், கட்டுமான இயந்திரங்கள் மற்றும் லாரிகளின் தேவை அதிகரித்துள்ளன என்று வாங் கூறினார். இந்த காலகட்டத்தில் அரசுத் துறையின் முதலீடு 3.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் தனியார் துறை முதலீடு 2.8 சதவிகிதம் சரிந்தது, முதல் ஏழு மாதங்களில் இருந்ததைவிட 2.9 சதவிகித புள்ளிகள் குறைந்து வருவதாக என்.பி.எஸ் தரவு தெரிவிக்கிறது.

ஏற்றுமதிகள் மற்றும் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (பிஎம்ஐ) உள்ளிட்ட சமீபத்திய குறிகாட்டிகள் பொருளாதார செயல்பாடு மற்றும் உற்பத்தியில் தொடர்ச்சியான மீட்சியை சுட்டிக்காட்டியுள்ளன. குறிப்பாக சீனாவின் ஏற்றுமதி
ஆண்டுக்கு அமெரிக்க டாலர் அடிப்படையில் 9.5 சதவீதம் உயர்ந்துள்ளது, இது மார்ச் 2019 முதல் வலுவான லாபத்தைக் குறிக்கிறது.

இருப்பினும் மீட்பு சீரற்றதாக உள்ளது, குறிப்பாக பெருநிலப் பகுதி மற்றும் செங்து-சோங்கிங் பொருளாதார வட்டம் ஆகியவற்றில் பொருளாதார வேகம் குவிந்துள்ளது, அதே நேரத்தில் மத்திய சீனா பெரும்பாலும் பின்தங்கியிருக்கிறது" என்று வாங் கூறினார்.

"புதிய நகரமயமாக்கல் திட்டம் வெளிவருவதால் பிராந்திய மைய நகரங்கள் புலம்பெயர்ந்தோர், முதலீடு மற்றும் நிதி வளங்களை தொடர்ந்து ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதிக் கொள்கையில், திட்டமிடப்பட்ட வரவு செலவுத் திட்டம் மற்றும் அரசாங்க பத்திர வெளியீடு ஆகியவற்றில் ஆண்டின் முதல் பாதியில் திட்டமிட்டதை நிறைவேற்றும் என்றும் இது ஆண்டின் இரண்டாம் பாதியில் 13 சதவீதமாக இருக்கும் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :