திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 மே 2021 (09:12 IST)

100 கி.மீ ஓட்டம்; திடீர் மழை; இறந்து விழுந்த வீரர்கள்! – சீனாவில் சோக சம்பவம்!

சீனாவில் 100 கி.மீ மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் தட்பவெட்ப நிலை மாற்றத்தால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கன்சூ மாகாணத்தில் 100 கி.மீ மாரத்தான் ஓட்டம் தொடங்கி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 172 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஓட்ட பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்த பலருக்கு தட்பவெட்ப நிலை மாறுதல், உடல்கோளாறு காரணமான பிரச்சினைகளால் சாலையிலேயே இறந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை வரை மாரத்தான் ஓட்ட தடத்தில் இதுவரை 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 5 பேர் மாயமாகியுள்ளனர். மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட 151 பேர் நலமுடன் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மாரத்தான் ஓட்டத்தின் இடையே எதிர்பாராமல் பெய்த கனமழையால் தட்பவெட்ப மாற்றம் எழுந்ததாக கூறப்படுகிறது.