செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (17:05 IST)

காதல் சிறைக்கு காவல் சிறை எவ்வளவோ தேவலாம்! வாலிபரின் பலே முடிவு!

சீனாவில் இளைஞர் ஒருவர் காதலியின் தொல்லை தாங்க முடியாமல் திருடிவிட்டு சிறைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த இளைஞர் சென். இவர் ஒரு பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார். நீண்ட காலமாக தொடரும் காதலை அடுத்த கட்டமாக திருமணத்துக்கு கொண்டு செல்ல முயன்றிருக்கிறார் அந்த பெண். சென்னிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கேட்க, அதற்கு சென் மறுத்திருக்கிறார்.

மீண்டும் மீண்டும் காதலி திருமணம் செய்து கொள்ள சொல்லி தொல்லை கொடுத்து வர அதிலிருந்து தப்பிக்க நூதனமான வழியை பின்பற்றியுள்ளார் சென். சீனாவில் உள்ள டான்ஸ் க்ளப் ஒன்றிற்கு சென்ற சென் அங்கிருந்து விலை மதிப்புள்ள ஸ்பீக்கர் ஒன்றை திருடியுள்ளார். திருட்டு சம்பவத்துக்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துக்கு பிறகு அவரது காதலி பிரிந்து சென்றாரா என்பது தெரியாவிட்டாலும் காதல் சிறைக்கு காவல் சிறை எவ்வளவோ மேல் என சென் எடுத்த முடிவுதான் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.