தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் ஜிடிபி சரிவு: அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகள் நிலை என்ன?
- ஒரே புழுக்கமா இருக்கே; அதுக்கு விமான இறக்கையில நடக்கணுமா? – பகீர் கிளப்பிய பெண்!
- பழைய இழப்புகளை இந்தியா மறக்க வேண்டாம்: சீன பத்திரிக்கை மிரட்டல்!
- போக்கு காட்டும் சீனா; பேச்சுவார்த்தையில் தீர்வை எட்டுமா இந்தியா?
- நேற்று ஒரே நாளில் 1166 பேர் பலி: எந்த நாட்டில் தெரியுமா?
அணு ஆயுதங்களை இரு மடங்காக்க சீனா திட்டம்! – அமெரிக்கா எச்சரிக்கை!
சீனா – அமெரிக்கா இடையே சில காலமாக மோதல் எழுந்துள்ள நிலையில் சீனா அணு ஆயுதங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா – சீனா இடையே பொருளாதார ரீதியான மோதல் வலுத்து வந்தது. இந்நிலையில் கொரோனா விவகாரத்திலும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் எழுந்த நிலையில் சீனாவின் கடல் பகுதியில் அமெரிக்க கப்பல்கள் புகுந்தது நிலைமையை இன்னும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும் இந்தியாவுடனான எல்லை பிரச்சினை, தைவானுடனான பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு போன்றவற்றால் சீனாவுக்கு உலக நாடுகளிடையே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் சீனா தனது அணு ஆயுதங்களை இரு மடங்காக அதிகரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான மோதல் போருக்கு வித்திடுமோ என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
அடுத்த கட்டுரையில்
