வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (12:10 IST)

பழைய இழப்புகளை இந்தியா மறக்க வேண்டாம்: சீன பத்திரிக்கை மிரட்டல்!

சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைமஸ் பத்திரிக்கை இந்தியாவை மிரட்டும் வகையில் செய்தி வெளியிடுள்ளது. 
 
கிழக்கு லடாக்கில் பாங்கோங் டி சோ ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை இரவு மீண்டும் மோதல் ஏற்பட்டது. அத்துமீறிய சீன வீரர்களை தடுத்து நிறுத்தி இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.  
 
இதனால் எல்லையில் இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. இதனை சரிசெய்ய இரு நாட்டு ராணுவத்தை சேர்ந்த பிரிகேடியர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அது முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.  
 
இதனையடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் எல்லைப் பிரச்னை பற்றி இந்தியா - சீனா இடையே இன்று படைப்பிரிவு தளபதிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதேனும் நல்ல முறையில் முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
ஆனால், சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைமஸ் பத்திரிக்கை வெளியிடுள்ள செய்தியில் சீன ராணுவத்தின் ஊடுருவல் நடவடிக்கையை முன்கூட்டியே முறியடித்ததாக இந்தியா கூறியுள்ளது. முன்கூட்டியே என்ற வார்த்தை இந்தியா அழிவுக்கான பாதையை தேர்வு செய்ததை காட்டுகிறது. 
 
இந்த முறை இந்திய ராணுவம் மோதலை துவங்கியுள்ளது. சக்திவாய்ந்த சீனாவை இந்தியா சந்தித்துள்ளது. ஒந்த விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவின் பேச்சை கேட்கக்கூடாது. சீனாவிடம் மோத இந்திய எண்ணினால் அதனை சந்திக்கும் திறனும், ஆயுதங்களும் சீனாவிடம் உள்ளது. 
 
ராணுவ பலத்தை காட்ட இந்தியா விரும்பினால், 1962 ஆம் ஆண்டு இந்தியா சந்தித்ததைவிட அதிக இழப்பை இந்தியாவிற்கு ஏற்படுத்த சீன ராணுவத்தால் முடியும் என மிரட்டல் தோணியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.