1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (18:59 IST)

மக்களின் போராட்டத்திற்கு பணிந்தது சீன அரசு..ஊரடங்கில் தளர்வு

China
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நாடு தாங்காது என அந்நாட்டு மக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இதனை அடுத்து சீனா தற்போது தனது முடிவில் இருந்து இறங்கி வந்துள்ளது. இதுகுறித்து சீன அரசு அதிகாரிகள் கூறியபோது மக்களின் போராட்டத்தை அடுத்து ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்க இருப்பதாகவும் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க இருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு கொரோனா வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran