செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2016 (10:42 IST)

மீண்டும் உயிர்பெரும் டைட்டானிக்!!

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆர்.எம்.எஸ். டைட்டானிக் (RMS Titanic) என்ற பிரம்மாண்ட சொகுசுக்கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பனிப்பாறை ஒன்றில் மோதி கடலில் மூழ்கியது. 


 
 
இந்த விபத்தில் 15,000 பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை மையமாகக் கொண்டு டைட்டானிக் திரைப்படம் எடுக்கப்பட்டது.
 
இந்நிலையில், டைட்டானிக் கப்பலை மீண்டும் சீனா உருவாக்கத் தொடங்கியுள்ளது. சீனா உருவாக்கும் டைட்டானிக் கப்பல் சுற்றுலாப் பயணிகளுக்காக.
 
டைட்டானிக் ரிப்ளிகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய டைட்டானிக் சீனாவின் சிச்சுவான் கடற்கரையில் இருந்து 80 மைல்கள் கிலோமீட்டர்கள் தொலைவில் நிறுத்தப்படும்.
 
இந்த டைட்டானிக் ரிப்ளிகாவில் நீச்சல் குளம், விளையாட்டு அறை, திரையரங்கம் மற்றும் ஆடம்பர விருந்தினர் மாளிகை உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இருக்கும். 
 
இந்த கப்பல் கட்ட ஆகும் செலவு 145 மில்லியன் டாலர் (986 கோடி). இரண்டு ஆண்டுகளுக்குள் டைட்டானிக் ரிப்ளிகா தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.