வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (09:23 IST)

சீனா-பாகிஸ்தான் இடையே பஸ் போக்குவரத்து ஆரம்பம்

இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் கடந்த சில வருடங்களாக நெருக்கமாகி வரும் நிலையில் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பஸ் போக்குவரத்து வரும் நவம்பர் 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது

பாகிஸ்தானின் தலைநகர் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவை தொடங்கவுள்ளதாகவும், இந்த பஸ் மூலம் சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கும், சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.13 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல்முறையாக சீனாவை பாகிஸ்தானுடன் இணைக்கும் நேரடி சாலை வசதிக்கு இருநாட்டு பொதுமக்களும் வணிகர்களும் பெரும் ஆதராவை தருவார்கள் என்று  கூறப்படுகிறது.