வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 31 அக்டோபர் 2019 (15:08 IST)

2050 க்குள் சென்னை மூழ்குமா?? அதிர்ச்சி தகவல்

2050 க்குள் சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலுக்குள் மூழ்கிவிடும் என பருவநிலை மாற்றம் குறித்து ஆராயும் அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளதாக வெளிவரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்து ஆராயும் அமெரிக்க நிறுவனம், ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கடல் மட்ட உயர்வால் 2050 க்குள் இந்தியா, சீனா, வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகள் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக இந்தியாவில் கடல் மட்ட உயர்வால் கடலோர மாநிலங்களான குஜராத், தமிழகம், கேரளா, ஒடிசா, உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் பகுதி கடலில் மூழ்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடல் மட்ட உயர்வால், ஆசிய கண்டத்தில் 30 கோடி பேர் வெள்ளத்தால் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் 3 கோடியே 60 லட்சம் இந்தியர்கள் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்படுகிறது. குறிப்பாக மும்பை, சென்னை, உள்ளிட்ட கடலோர நகரங்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இது முந்திய ஆய்வை விட 7 மடங்கு அதிகம் எனவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.