வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (17:08 IST)

குவைத் தீ விபத்து.! பலியான 40 பேரும் இந்தியர்கள்.! அதிர்ச்சி தகவல்...!

Kuwaith Fire
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தில் மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டது. தீ குடியிருப்பு முழுவதும் பரவியதால், அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முயன்றனர். இருப்பினும் தீ விபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர்.
 
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி சித்தியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 43 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது.
 
இந்நிலையில் தீ விபத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 40 பேர் இந்தியர்கள் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும் அங்கு இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை குறித்து இந்திய தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல் கேட்டுள்ளது.

 
குவைத் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.