ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (21:08 IST)

மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு..! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

Central Ministers
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களின் இலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
 
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  இதில் அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டன.
 
இந்நிலையில்  மத்திய அமைச்சர்களின் இலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு, மத்திய பணியாளர், அணுசக்தி துறை, விண்வெளி துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமித்ஷாவிற்கு உள்துறையும், கூட்டுறவுத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சராக 3வது முறையாக நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை போக்குவரத்துறை இணை அமைச்சர்களாக ஹர்ஷ் மல்ஹோத்ரா, அஜய் தம்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அஷ்வினி வைஷ்ணவ்விற்கு மீண்டும் ரயில்வே துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராஜ்நாத் சிங்கிற்கு மீண்டும் பாதுகாப்புத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக மீண்டும் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பியூஷ் கோயலுக்கு வர்தகத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அன்ன பூர்ணா தேவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராக ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். பூபேந்திர யாதவ்விற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பவருநிலைத் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. எஃகு, கனரகத் தொழில்துறை அமைச்சராக குமாராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தொலை தொடர்புத்துறை, வடகிழக்கு மாநில வளர்ச்ச்சித் துறை அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பபட்டுள்ளார். சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக ஷோபா நியமிக்கப்பட்டுள்ளார். தர்மேந்திர பிரதானுக்கு மனிதவளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவராஜ் சிங் சவுகானுக்கு வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் சிறுபான்மையினர் வளர்ச்சித் துறை அமைச்சராக கிரன் ரிஜிஜு நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சிராக் பஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்
 
மனோகர் லால் கட்டாருக்கு மின் துறை மற்றும் வீட்டு வசதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிஷண் ரெட்டிக்கு நிலக்கரி, சுரங்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சராக ஜிதன் ராம் மஞ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.  நீர்வளத் துறை அமைச்சராக சிஆர் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு சுற்றுலாத்துறை, கலாச்சாரத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுரேஷ் கோபி சுற்றுலா, பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ராஜீவ் ரஞ்சன் சிங் கால்நடைத்துறை, மீன்வளத்துறை, பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்பானந்தா சோனோவால் துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர் வழி போக்குரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வீரேந்திர குமாருக்கு சமூக நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி  நியமிக்கப்பட்டுள்ளார்.

 
பழங்குடியின நலத்துறை அமைச்சராக ஜுவல் ஓரல் நியமிக்கப்பட்டுள்ளார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக ஹர்தீப் சிங் புரி நியமிக்கப்பட்டுள்ளார்.    இளைஞர் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்புத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார்.