வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (15:28 IST)

டே ஜீரோ நாளை தள்ளிப்போட்ட விவசாயிகள்

கேப் டவுன் நகரில் முழுமையாக தண்ணீர் தீர்ந்து போகும் சூழல் ஏற்பட்ட நிலையில் விவசாயிகள் சுமார் 10,000 மில்லியன் லிட்டர் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர்.

 
தென் ஆப்பரிக்காவின் 2வது பெரிய நகரமான கேப் டவுன் முழுமையாக தண்ணீர் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. உலகில் தண்ணீர் இல்லாமல் போகும் முதல் நகரம் என்று கூறப்பட்டது. கேப் டவுனில் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
 
டே ஜீரோ வெகு தொலைவில் இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது விவசாயிகள் டே ஜீரோ நாளை தள்ளிப்போட்டுள்ளனர். விவசாயிகள் அமைப்பான கிரோன்லேண்ட் நீர் பயனர் சங்கத்தினர் சுமார் 10,000 மில்லியன் லிட்டரை கேப் டவுனுக்கு இலவசமாக திறந்துவிட்டுள்ளனர்.
 
இதுகுறித்து கிரோன்லேண்ட் அமைப்பின் சிஇஓ கூறியதாவது:-
 
எங்களிடம் தண்ணீர் இருந்தது. ஏன் அடுத்த எல்லையில் தண்ணீர் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று நினைத்தோம். அதானல் கேப் டவுனுக்கு சுமார் 10,000 மில்லியன் லிட்டர் தண்ணீரை திறந்து விட்டோம். எங்கள் பகுதியில் மழை பெய்யாவிட்டால் நாங்களும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் நோக்குவோம் என்றார்.
 
திறந்து விடப்பட்ட நீர் இன்னும் சில நாட்களில் கேப் டவுன் நகரை சென்றடைய உள்ளது. மூன்று ஆண்டுகளாக போதிய மழை பெய்யாத காரணத்தால் கேப் டவுனில் நீர் நிலைகள் வற்றி தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.