புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:26 IST)

தடுப்பூசியால் வந்த வினை; 50 ஆண்டுகளுக்கு பின் கனடாவில் எமெர்ஜென்சி!

கனடாவில் லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்ட போராட்டத்தின் காரணமாக கனடாவில் எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை கட்டாயமாக்கி வருகின்றன. அதேசமயம் தடுப்பூசி கட்டாயப்படுத்தப்படுவதற்கு பல நாடுகளில் மக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கனடாவில் ட்ரக் ஓட்டுனர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் ட்ரக் ட்ரைவர்கள் போக்குவரத்து சாலைகளில் ட்ரக்கை வழியை மறித்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கனடாவில் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் கனடாவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக எமெர்ஜென்சியை அறிவித்துள்ளார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. எனினும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த ராணுவம் வரவில்லை. போலீஸார் மூலமாகவே அப்புறப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.