செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மே 2022 (08:47 IST)

துப்பாக்கி சூட்டை நேரடி ஒளிபரப்பு செய்த நபர்! – அமெரிக்காவில் அதிர்ச்சி!

Bufallo City
அமெரிக்காவின் நியூயார்க் மாகாண சூப்பர் மார்க்கெட் ஒன்றில் துப்பாக்கிசூடு நடத்திய நபர் அதை நேரடி ஒளிபரப்பும் செய்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அடிக்கடி தனி மனிதர்கள் நடத்தும் துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃபல்லோ நகரில் இருந்த சூப்பர் மார்க்கெட்டில் திடீரென துப்பாக்கியுடன் புகுந்த நபர் அங்கிருந்த மக்களை சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் 10 சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தியவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் அதை நேரடி ஒளிபரப்பு செய்ததாக கூறப்படுகிறது. பஃபலோ நகரில் கறுப்பின மக்கள் அதிகம் வாழும் நிலையில் இனவெறி காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.