திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (14:31 IST)

அண்ணன் - தங்கை உள்ளினச்சேர்க்கை: கூண்டோடு கைது செய்த போலீஸ்

ஆஸ்ரேலியாவில் அண்ணனும் தங்ககையும் திருமணம் செய்துக்கொண்டு 7 பிள்ளைகளை பெற்றிருத்தனர். இவர்களின் வாரிசுகள் பெருகி தற்போது இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. 
 
அண்ணனும் தங்கையும் உள்ளினச்சேர்கை முறையை பின்பற்றி 7 பிள்ளைகள் பிறந்தது. இதையே இவர்களது பிள்ளைகளும் பின்பற்ற தற்போது அந்த அண்ணன் - தங்கை தம்பதிக்கு 40 வாரிசுகள் உள்ளனர். 
 
ஆனால், இதில் உள்ள சிக்கல் என்னவெனில் இந்த 40 பேரில் பலருக்கு உடல் குறைபாடுகள் அதாவது காது கேட்காமல், வாய் பேச முடியாமல் மரபணு குறைப்பாட்டால் பிறந்துள்ளனர். 
 
மேலும், இவர்கள் எந்தவொரு வெளியுலக தொடர்பும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். மின்சார வசதி, தண்ணீர் வசதி இல்லாமல் கழிப்பறையை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருந்து வந்துள்ளனர். 
 
இந்த குடும்பத்தை பற்றி தெரிந்ததும் போலீஸார் இவர்கள் அனைவரையும் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.