வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 29 ஜனவரி 2020 (16:21 IST)

சீனாவுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து..

கொரனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து சீனாவுக்கு செல்லும் மற்றும் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

சீனாவில் பரவிவரும் கொரனா என்னும் ஆட்கொல்லி வைரஸால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தைவான், தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கொரனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரனா வைரஸை தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இந்நிலையில் பிரிட்டன் விமான சேவை நிறுவனம், சீனாவிற்கு செல்லும் மற்றும் சீனாவிலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.

இது குறித்து அந்நிருவனம் “அத்தியாவசிய பயணங்களைத் தவிர சீனா செல்லும் மற்றும் அங்கிருந்து பிரிட்டன் வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு மன்னிக்கவும். வாடிக்கையாளர்கள், விமானக்குழுவினரின் பாதுகாப்புதான் எப்போதும் எங்களுக்கு முக்கியம்” என அறிக்கை வெளியிட்டுள்ளது.