திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 21 ஜூலை 2016 (04:46 IST)

"வாட்ஸ்-ஆப்புக்கு" இடைக்காலத் தடை - ஒன்பது கோடி பயனாளர்கள் பாதிப்பு

பிரேசிலில், நீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடையைத் தொடர்ந்து நாடு முழுவதும் பிரபல தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் ஆப் [WhatsApp] தற்காலிகமாக செயலிழந்து போனது.
 

 
குற்றப்புலனாய்வு தொடர்பாக பிரேசில் காவல்துறையினர் தகவல் கேட்டபோது அந்நிறுவனம் தர மறுத்ததால் நீதிபதி இந்த தடையை விதித்தார்.
 
கீழ் நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நான்கு மணி நேரத்தில் நீக்கியது. நான்குமணி நேரமே நீடித்த இந்த தடையால் ஒன்பது கோடிக்கும் அதிகமான WhatsApp பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
 
பிரேசில் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.