சிறையிலிருந்து தப்ப தனது மகளை போல மாறிய கைதி..

Last Updated: திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (17:42 IST)
பிரேசில் நாட்டில் சிறை கைதி ஒருவர், தனது மகளைப் போல வேடமிட்டு தப்ப முயன்றுள்ளார்.

பிரேசில் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிளாவினோ டா சில்வா, ஒரு கேங் லீடர் ஆவார். அவருக்கு 19 வயதில் ஒரு மகள் உள்ளார். சில்வாவை அவரது மகள் சிறையில் அடைக்கப்பட்ட தனது தந்தையை சந்திக்க வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் தனது தந்தையை பார்க்க வந்தபோது, தந்தை ஒரு திட்டம் தீட்டியிருப்பதை மகள் அறிந்திருக்கவில்லை.

தன்னை பார்க்க வந்த மகளை சிறையிலேயே விட்டுவிட்டு, திட்டமிட்டபடி தனது மகளைப் போலவே உடை, மாஸ்க் மற்றும் விக் என அனைத்தையும் தயாராக வைத்துள்ளார். பின்பு மகளைப் போலவே வேடமணிந்து, மகளை சிறையிலேயே விட்டுவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

ஆனால் போலீஸார், சில்வாவின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வந்துள்ளது. முழுவதுமாக தனது மகளைப் போலவே மாறிய கைதியை போலீஸார் மடக்கி பிடித்தனர். மேலும் இதை விட அதிக பாதுகாப்பு உள்ள தனிச்சிறையில் சில்வாவை மாற்ற உள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :