சிங்கப்பூர் குத்துச்சண்டையில் தமிழர் உயிரிழப்பு
சிங்கப்பூரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியன் பைட்டிங் சாம்பியன் ஷ்ப் போட்டி நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் பிரபல வீரர் ஸ்டீவன் லிம் மற்றும் அவரை எதிர்த்து தமிழர் பிரதீப் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளனர். போட்டி தொடங்கியதும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். அப்போது பலத்த தாக்குதலுக்கு உள்ளான பிரதீப் மேடையிலே விழுந்தார்.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குத்துச்சண்டை போட்டி ஏற்பாட்டளர்கள் கூறியதாவது:-
விளையாட்டு தொடங்குவதற்கு முன்னதாக இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், விளையாட்டு போட்டியில் பங்கேற்க இருந்த வீரர் விலகி கொண்டதால் குறுகிய காலத்தில் அந்த இடத்தில் பிரதீப் விளையாட சம்மதம் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த பிரதீப்புக்கு ஸ்டீவன் லிம் இரங்கல் தெரிவித்தார். காவல்துறையினர் பிரதீப் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.