புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (15:41 IST)

இந்தியா - சிங்கப்பூர் இடையேயான அபரிமிதமான வணிகம்!!

இந்தியா - சிங்கப்பூர் இடையேயான வணிகம் சில வருடங்களில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. 


 
இதனிடையே இரு தரப்புக்கும் இடையேயான வணிகத்தின் மதிப்பு 2020 ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது சிங்கப்பூர் - இந்தியா இடையேயான இருதரப்பு வணிகத்தின் மதிப்பு 17 பில்லியன் டாலர்களாக உள்ளது. சிங்கப்பூரில் நடந்து வரும் சிங்கப்பூர் - இந்தியா சர்வதேச கண்காட்சியில் இது பற்றி பேசப்பட்டுள்ளது.
 
இந்த கண்காட்சியில் ஆடைகள், ஆபரணங்கள், ரத்தினக் கற்கள், மரச்சாமான்கள், கைவினைப் பொருட்கள், ஜவுளிப் பொருட்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. 
 
இந்திய ஏற்றுமதி அமைப்புகள் கூட்டமைப்புடன் 89 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. 200-க்கும் மேற்பட்ட கடைகளில் 10,000-க்கும் மேற்பட்ட இந்தியப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.