1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 15 டிசம்பர் 2021 (06:55 IST)

எதிர்பார்த்ததை விட வேகமாக பரவுகிறது ஒமிக்ரான்: உலக சுகாதார மையம்

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளில் வேகம் எடுத்துள்ளது என்று கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு எதிர்பார்த்ததைவிட ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதாகவும் அதனால் அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது
 
ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் ஒமிக்ரான் பரவி விட்டது என்று கூறியுள்ள உலக சுகாதார மையம் பூஸ்டர் ஊசி போடுவது குறித்து அனைத்து நாடுகளும் ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது 
 
இந்தியா உள்பட உலக நாடுகளில் ஒமிக்ரான் வைரசால் மூன்றாவது அலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது