வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (14:51 IST)

உ.பி. சட்டசபையில் புகையிலை பயன்படுத்திய மற்றொரு எம்.எல்.ஏ...

up asselmply
பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபை விவாதத்தின்போது, புகையிலை பாக்கு பயன்படுத்திய வீடியோ சர்ச்சையாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு நடந்த சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது, ஒரு பாஜக எம்.எல்.ஏ ஆன்லைன் ரம்மி விளையாடியது சர்ச்சையாது. இந்த வீடியோயும் வைரலாகி வருகிறது..

இந்த நிலையில்   மற்றொரு  பாஜக எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபை விவாதத்தின்போது, அதைக் கவனிக்காமல்,  தன் இருக்கையில் அமர்ந்தபடி, புகையிலை பாக்கு பயன்படுத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கபப்ட்ட அரசியல் பிரதி நிதி, மக்களின் பிரச்சனைகளைப் பேச வேண்டிய சட்டசபையில் இப்படி நடந்துகொண்டதற்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.