1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (17:53 IST)

ஐபிஎல் ஏலத்தில் நான் 200 கோடிக்கு ஏலம் போயிருப்பேன்: பிரபல கிரிக்கெட் வீரர் டுவிட்

ஐபிஎல் ஏலத்தில் நான் 200 கோடிக்கு ஏலம் போயிருப்பேன்: பிரபல கிரிக்கெட் வீரர் டுவிட்
ஐபிஎல் ஏலத்தில் நான் மட்டும் கலந்து கொண்டிருந்தால் 200 கோடிக்கு ஏலம் போய் இருப்பேன் என பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் கூறியிருக்கும் நிலையில் அந்த கிரிக்கெட் வீரரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்
 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் இந்த 14 ஆண்டுகளில் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக கருத்துவேறுபாடு இருப்பதன் காரணமாகவே பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் சேர்க்கப்படவில்லை 
 
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹின்ஷா அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் நான் மட்டும் ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்றிருந்தால் 200 கோடிக்கு ஏலம் போய் இருப்பேன் என டுவிட் செய்திருந்தார். அவரை இந்திய ரசிகர்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்