1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 8 நவம்பர் 2019 (17:10 IST)

’இன வேற்றுமை’ காட்டிய பாதிரியார் ! அதிகரிக்கும் கண்டனக் குரல்கள்... வைரல் வீடியோ

இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் உயர்வு தாழ்வு கொண்டவனில்லை. அதை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னமே வள்ளுவர் தனது திருக்குறளில்  பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் வெளிநட்டில் ஒரு தேவாலயத்தில் நேற்று  ஆராதனை நடைபெற்றது. அப்போது ஆலய பாதிரியார், திருச்சபை மக்களுக்கு அப்பம் கொடுத்தார். அப்போது வெள்ளையர்களுக்கு வாயிலும், கறுப்பர்களுக்கு கையிலும் கொடுத்தார். இனவேற்றுமை பார்ப்பது தவறு என்று எத்தனை முறை சொன்னாலும், ஜார்ஜ் வாஷிங்டன், மண்டேலா, ஜூனியர் மார்டின் லூதர் கிங் போன்ற எண்ணற்ற தலைவர்கள் தோன்றி இனவெறிக்கு எதிராக போரடினாலும் மக்கள் அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் அதை தடுக்க முடியும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இனவேற்றுமையை ஊக்குவிக்கும்படி நடந்து கொண்ட பாதிரியாருக்கு எதிராகக் மக்கள் கண்டன குரல்கள்  எழுப்பி வருகின்றனர்.