வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 13 ஜூலை 2017 (21:08 IST)

அதிக காபி அருந்துபவரா நீங்கள்?? எல்லாம் நன்மைக்கே!!

அதிக காபி அருந்துபவரா நீங்கள்?? எல்லாம் நன்மைக்கே!!
அதிக அளவு காபி குடிப்பவர்களுக்கு சில நோய்களின் தாக்கம் குறைவாக கணப்பட்டு நீண்ட நாட்கள் வாழ முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.


 
 
தினமும் காபி குடித்தால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.
 
காபி குடிப்பவர்களுக்கு இருதய நோய், புற்று நோய், கல்லீரல் நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் தாக்கம் மிகவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.
 
காபியில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் எனப்படும் நச்சு தன்மை எதிர்ப்பு சக்தி அதிக அளவில் உள்ளதால் நோய்கள் வராமல் தடுக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.