புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (15:52 IST)

”உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா?”.. கொந்தளிக்கும் கமலின் வைரல் வீடியோ

எங்கே பேனர் வைக்க வேண்டும் என உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா என்று கமல்ஹாசன் அரசியல் கட்சிகளை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணின் மிது பேனர் விழுந்ததில் உயிரிழந்ததை அடுத்து, பல அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனரும், நடிகருமான கமல்ஹாசன் ஒரு காட்டாமாக விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், ”உலகில் மிக கொடுமையான விஷயம், வாழவேண்டிய பிள்ளைகளின் மரணச் செய்தியை பெற்றோர்களிடம் சொல்வது தான். அரசாங்கத்தின் அலட்சியத்தால் பல ரகுக்களும்,சுபஸ்ரீக்களும் கொல்லப்படுகின்றனர்” என கூறினார்.

மேலும், அதில், “எங்கே பேனர் வைக்க வேண்டும்? எங்கே வைக்ககூடாது? என உங்களுக்கு அறிவு இல்லையா?” என காட்டமான கேள்வியை கேட்டுள்ளார்.

முன்னதாக அமித் ஷா ஹிந்தி குறித்து கூறிய கருத்திற்கு “ எந்த ஷாவாலும் இந்திய ஜனநாயகத்தை ஒன்றும் செய்துவிட முடியாது” என கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டது வைரலானது. இதனைத் தொடர்ந்து தற்போது விதிகளை மீறி பேனர் வைக்கும் அரசியல் கட்சிகளை விளாசியிருப்பது கமலின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.